2011-08-06 15:01:44

வெனெசுவேலாவில் சுமார் இருபதாயிரம் கைதிகளை விடுதலை செய்யப் பரிந்துரை


ஆக.06,2011. வெனெசுவேலா நாட்டுச் சிறைகள் கொள்ளவுக்கு அதிகமாக நிரம்பி வழிவதைச் சரிப்படுத்தும் நோக்கத்தில் சுமார் இருபதாயிரம் கைதிகளை உடனடியாக விடுவிப்பதற்கு அந்நாட்டுச் சிறைத்துறையின் புதிய அமைச்சர் இரிஸ் வரேலா பரிந்துரை செய்துள்ளார்
வெனெசுவேலா நாட்டுச் சிறைகளில் தற்சமயம் 50 ஆயிரம் கைதிகள் இருப்பதால் இருபதாயிரம் கைதிகள் கட்டாயமாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்று வரேலா தெரிவித்தார்.
வெனெசுவேலா நாட்டுச் சிறைகளில் 14 ஆயிரம் கைதிகள் மட்டுமே இருக்க முடியும் என்று ஓர் அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு அந்நாட்டுச் சிறைகளி்ல் இடம் பெற்ற வன்முறையில் 300க்கும் அதிகமான கைதிகள் இறந்தனர். அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததே இந்தக் கலவரத்திற்கு காரணம் என அரசு சாரா அமைப்புகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.