2011-08-06 15:02:36

செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


ஆக.06,2011. செவ்வாய்க் கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் நான்காவது கிரகமாக கருதப்படும் செவ்வாய்க் கிரகத்தில், தண்ணீர் இருப்பதை கடந்த 10 ஆண்டுக்கு முன்பே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். இருந்த போதிலும், அது உறைந்து இருப்பதாகவே இதுவரை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், செயற்கைக்கோள் மூலம் மார்ட்டியன் எரிமலைப் பகுதியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், செவ்வாய்க் கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரத்தை தற்போது அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நிலத்துக்கடியில் இருந்த நீரோட்டம் இருப்பதற்கானப் படிமங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கும் படுகைகள், பின்னர் வெப்ப காலத்தில் உருகித் தண்ணீராக ஒடுவதையும் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தற்போதுள்ள இந்தப் படுகைகள் உருகித் தண்ணீராக மாறினால், அது செவ்வாய்க் கிரகம் முழுவதையும் ஆக்கிரமித்து கடல்போன்று இருக்குமென்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இத்தகவல்கள் விஞ்ஞான ஆராயச்சி குறித்த இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.