2011-08-04 15:13:16

பக்கவாதத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 இலட்சம் பேர் பாதிப்பு


ஆக.04, 2011. பக்கவாதத்தால் ஆண்டுக்கு 10 இலட்சம் பேர் பாதிக்கப்படுவதாக, இந்திய மருத்துவ கழகம் கம்பம் பள்ளத்தாக்கு கிளை சார்பில் நடத்தப்பட்ட, தொடர் மருத்துவக்கல்வி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
"பக்கவாதத்தில் இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகளின் பங்கு' குறித்து உரையாற்றிய நரம்பியல் சிறப்பு நிபுணர் டாக்டர் சுதன்வாராவ், இந்தியாவில் ஆண்டிற்கு 10 இலட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 12 சதவீதம் பேர் 40 வயதிற்குக் குறைவாக உள்ளவர்கள் என்றார்.
"த்ரோம்பாலிசிஸ்' என்ற புதிய சிகிச்சை முறையில், நூற்றுக்கு 33 பேரை முற்றிலும் குணப்படுத்தவோ, அல்லது இறப்பில் இருந்து மீட்கவோ முடியும், ஆனால், இம்முறையிலான சிகிச்சையை நோய் கண்ட நான்கரை மணி நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற அவர், 1995ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய சிகிச்சை முறை இந்தியாவில் இன்னும் சரியாக பயன்படுத்தப்படவில்லை என மேலும் கூறினார்







All the contents on this site are copyrighted ©.