2011-08-04 15:14:16

இந்தியாவுடனான விசா ஒப்பந்தத்துக்கு இரஷிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது


ஆக.04,2011: இந்தியாவிலிருந்து இரஷ்யாவுக்கும் இரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கும் செல்வதற்கான அனுமதி விசா வழங்குவதில் எளிய மற்றும் விரைவான முறைகள் உள்ளிட்ட ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இரு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குச் சிக்கல் இன்றி விரைவாக விசா வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இரஷ்ய நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்துக்கு இரஷ்ய அமைச்சரவை இப்புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இது அந்நாட்டு மக்களவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இரஷ்ய அதிபரின் இசைவுக்கு பிறகு சட்டமாக்கப்படும்.







All the contents on this site are copyrighted ©.