2011-08-03 16:34:26

டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் திருமணப் பதிவு மசோதா


ஆக.03,2011. இந்தியத் தலைநகர் டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் திருமணங்களைப் பதிவு செய்யும் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் ஷீலா திக்ஷித் தலைமையிலான அரசினால் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவின் மூலம், கணவர்களால் கைவிடப்பட்டப் பெண்களுக்கு நிதி ஆதரவும் அவர்களின் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பும் வழங்கப்படும்.
தி்ருமணமாகி 60 நாள்களுக்குள் பதிவு செய்யாமல் இருந்தால் அத்தம்பதியருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகின்றது.
டெல்லியில் பல பெண்கள் கணவர்களால் கைவிடப்பட்டுத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாத நிலையில் பாதுகாப்பின்றி வாழ்வதாக 2006ல் உச்சநீதிமன்றம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே இந்தச் சட்டம் அமலில் இருக்கின்றது







All the contents on this site are copyrighted ©.