2011-08-03 16:36:24

உலக அளவில் மனஅழுத்தப் பிரச்சனை அதிகம் உள்ள நாடு பிரான்ஸ்


ஆக.03,2011. உலக நாடுகளில் அதிகமான மன அழுத்தம் மிக்க நாடாக பிரான்ஸ் உள்ளது என அண்மை ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஸ்டோனி ப்ரூக்கில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த அதிர்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர்.
வருவாய் அதிகம் உள்ள 18 நாடுகளில் 89 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை வெளியிட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டின் பி.எம்.சி (BMC) மருத்துவ இதழ், பிரான்ஸ் மக்கள் அதிக மன அழுத்தப் பிரச்சனையில் தவிப்பதாகக் தெரிவிக்கிறது.
உலகில் ஏறக்குறைய 12 கோடியே 10 இலட்சம் பேர் மனச்சோர்வால் துன்புறுவதாகவும் இதனால் ஒவ்வோர் ஆண்டும் 8 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. உலக மன அழுத்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள பிரான்சில் 21 விழுக்காட்டு மக்கள் மன அழுத்தம் பிரச்சனையில் தவிக்கிறார்கள். அதையடுத்து நாடுகள் விவரம் அமெரிக்க ஐக்கிய நாடு, (19.2 விழுக்காடு), பிரேசில்(18.4) நெதர்லாந்து(17.9), நியூசிலாந்து(17.8), உக்ரெய்ன்(14.8), பெல்ஜியம்(14.1), கொலம்பியா(13.3), லெபனன்(10.9), இஸ்பெயின்(10.6), இஸ்ரேல்(10.2), இத்தாலி(9.9), ஜெர்மனி(9.9), தென்னாப்ரிக்கா(9.8), இந்தியா(9), மெக்சிகோ(6.6), சீனா(6.5) ஆகும்.








All the contents on this site are copyrighted ©.