2011-08-02 16:10:27

இரம்ஜான் மாதத்தையொட்டி கிர்குக் கத்தோலிக்கச் சமுதாயம் உள்ளூர் மருத்துவமனைக்கு உதவி


ஆக.02,2011. முஸ்லீம்கள் தொடங்கியுள்ள இரம்ஜான் மாதத்தையொட்டி ஈராக்கின் கிர்குக் கத்தோலிக்கப் பேராயர் லூயிஸ் சாக்கோ தலைமையிலான குழு மருந்துகளையும் பிற உதவிகளையும் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொடுத்துள்ளது.
பேராயர் சாக்கோ தலைமையில், குருக்களும் பொதுநிலை விசுவாசிகளும் 300 கிலோ கிராமுக்கு அதிகமான மருந்துகளையும் பிற உதவிகளையும் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொடுத்துள்ளனர்.
நோன்பு மற்றும் செபத்தின் காலமாகிய இப்புனித மாதத்தில் முஸ்லீம் சகோதரர்களுடன் நாமும் இணைந்து இறைவனிடம் அமைதிக்காகச் செபிப்போம் எனத் தனது மேய்ப்புப்பணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பேராயர் சாக்கோ.
20 கிர்குக் இளையோர் மத்ரித் உலக இளையோர் தினத்தில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தினத்தில் பல நாடுகளைச் சேர்ந்த 4,000 மாற்றுத்திறனாளி இளையோர் கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.