2011-08-01 16:14:03

பவேரியப் பகுதி குழுவுக்குத் திருத்தந்தையின் உரை


ஆக.01, 2011.கத்தோலிக்கர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு தங்களைத் திறந்தவர்களாக, சகோதரத்துவத்தில் வாழ்பவர்களாய், சகிப்புத்தன்மையுடையவர்களாய் வாழவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் 60வது குருத்துவ விழாக்கொண்டாட்டங்களையொட்டி தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்திருந்த ஜெர்மனியின் பவேரியாப் பகுதிக் குழுவை இஞ்ஞாயிறன்று காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் சந்தித்து உரை வழங்கிய பாப்பிறை, அவர்கள் தனக்கு வழங்கிய அப்பகுதிக்கேயுரிய கௌரவ மோதிரம் குறித்த தன் நன்றியை வெளியிட்டார். 1969ல் உருவாக்கப்பட்ட இந்தக் கௌரவ விருதானது இதுவரை 7 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிறந்து வளர்ந்த பூமியான பவேரியாப் பகுதியிலிருந்து அவருக்கு வாழ்த்துச் சொல்ல வந்த 300 பேர் அடங்கிய குழுவிற்குத் தன் நன்றியையும் வெளியிட்ட திருத்தந்தை, அப்பகுதியின் கோவில்கள் மற்றும் தெருக்களில் நாட்டப்பட்டுள்ள சிலுவைகளை நினைவுகூராமல் அப்பகுதி குறித்துச் சிந்திக்க முடியாது என்றார்.
ஜெர்மனியின் பவேரியாப் பகுதியின் இசைவளம், கவித்திறன், வரவேற்புப்பண்பு மற்றும் மகிழ்வு மனப்பான்மை ஆகியவை குறித்தும் நினைவுகூர்வதாகத் தெரிவித்தார் பாப்பிறை







All the contents on this site are copyrighted ©.