2011-08-01 16:24:22

ஆகஸ்ட் 01 வாழ்ந்தவர் வழியில்.....


திபேரியுஸ் க்ளவ்தியுஸ் சீசர் அகுஸ்டஸ் ஜெர்மானிக்கஸ் (Tiberius Claudius Caesar Augustus Germanicus) அல்லது முதலாம் க்ளவ்தியுஸ் கி.மு 10, ஆகஸ்ட் ஒன்றாந்தேதி பிறந்தார். இவர் நான்காவது உரோமைப் பேரரசர் ஆவார். தற்போதைய பிரான்சில் பிறந்த க்ளவ்தியுஸ் உரோமைப் பேரரசுக்கு வெளியே பிறந்த முதலாவது உரோமைப் பேரரசர் ஆவார். அரசியலில் பெரும் அனுபவம் இல்லாவிடினும் இவர் தனது ஆட்சியைத் திறம்பட வகித்து வந்தார். பல பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிறைவேற்றினார். உரோமைப் பேரரசு இவரது காலத்தில் மேலும் விரிவடைந்தது. பிரித்தானியாவைக் கைப்பற்றியமை இவரது காலத்திலேயே இடம்பெற்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் இவர் பல பின்னடைவுகளைக் கண்டார். அவற்றில் ஒன்று அவரது இறப்புக்குக் காரணமாயிற்று. கி.மு.54, அக்டோபர் 13ம் நாள் தனது நான்காவது மனைவியினால் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். திபேரியுஸ் க்ளவ்தியுஸ் சீசர் அகுஸ்டஸ் ஜெர்மானிக்கஸ் சாகும் வரைப் பதவியில் இருந்தார்







All the contents on this site are copyrighted ©.