2011-07-30 14:07:37

சிரியாவின் தற்போதைய அரசியல் பதட்டநிலை, மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் - முக்கிய விமர்சகர் கருத்து


ஜூலை 30,2011. சிரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சி, மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று ஒரு முக்கிய விமர்சகர் அறிவித்தார்.
இலண்டன் Heythrop கல்லூரியில் கீழைரீதி கிறிஸ்தவ மையத்தின் இயக்குனராக இருக்கும் Anthony O’Mahony, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
சிரிய அரசுத்தலைவர் Bashir al Assad ன் ஆட்சியைக் கவிழ்க்க நடத்தப்படும் அரசியல் நெருக்கடிகள், அந்நாட்டின் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்திற்குப் பெரும் ஆபத்துக்களை முன்வைக்கின்றன என்று கூறினார் ஒ’மஹோனி.
தற்போதைய ஆட்சிக் கவிழ்ந்தால் அது கிறிஸ்தவர்கள் மீது புதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட வழி செய்யும் என்றும் இந்த அச்சுறுத்தல் சிரியாவுக்கு மட்டுமல்ல, மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவருக்குமானது என்றும் அல் அசாத் மேலும் கூறினார்.
சிரியாவில் கிறிஸ்தவர்கள் தற்போது வெளிப்படையாகத் தங்கள் விசுவாசத்தைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் இசுலாமிய அரசு உருவானால் அது கிறிஸ்தவர்களின் இருப்புக்கு ஆபத்தாக இருக்கும் என்றார் அல் அசாத்.
சிரியாவில் சனநாயக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கேட்டுத் தொடங்கப்பட்ட மக்கள் புரட்சியானது, சுமார் 40 ஆண்டுகளாகப் பதவியிலிருக்கும் அரசுத்தலைவர் Bashir al Assad பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் போராட்டங்கள் தற்சமயம் இடம் பெற்று வருகின்றன.







All the contents on this site are copyrighted ©.