2011-07-29 15:34:52

மங்கோலியாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க மருத்துவ மையம் மீண்டும் திறப்பு


ஜூலை 29,2011. மங்கோலிய நாட்டிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க மருத்துவ மையம் மீண்டும் இவ்வியாழனன்று திறக்கப்பட்டுள்ளது.
மங்கோலியத் தலைநகர் Ulaan Baatar ல், புனிதர்கள் பேதுரு பவுல் பேராலய வளாகத்திலுள்ள புனித மேரி மருந்தகத்தை, அந்நகர் ஆயர் Wenceslao Padilla திறந்து வைத்தார்.
இம்மருந்தகம் 2004ல் செயோல் உயர்மறைமாவட்ட அருட்பணியாளர் மைக்கிள் கிம் ஜூங்-ஹோவால் முதலில் தொடங்கப்பட்டது. இங்கு 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.