பாகிஸ்தான் கிறிஸ்தவ சபை அனைத்துலக Hepatitis நோய் தினத்தைக் கடைபிடித்தது
ஜூலை 29,2011. பாகிஸ்தானில் மீட்புப்படை கிறிஸ்தவ சபையும் பாகிஸ்தான் சிறுபான்மை கூட்டமைப்பும்
இணைந்து இவ்வியாழனன்று அனைத்துலக Hepatitis நோய் தினத்தைக் கடைபிடித்தன. பஞ்சாப் மாநிலத்தின்
வெஹாரியில் கடைபிடிக்கப்பட்ட இவ்வுலக தினத்தில் அரசு சாரா அமைப்புகள், அரசியல் கட்சிகள்
உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் ஈரலைப் பாதிக்கும் hepatitis நோய்க்
கிருமிகளை ஒழிப்பதற்கு உலக அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு மருத்துவ நிபுணர்கள்
இவ்வுலக நாளில் வேண்டுகோள் விடுத்தனர். உலகில் போதைப்பொருள்கள் எடுப்போரில் hepatitisபி
நோய்க் கிருமிகளால் 13 இலட்சம் பேரும் hepatitisசி நோய்க் கிருமிகளால் ஒரு கோடிப் பேரும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.