இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு குடியுரிமை ஆர்வலர்கள் போராட்டம்
ஜூலை 29,2011. இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு குடியுரிமை ஆர்வலர்கள்
இவ்வியாழனன்று கொழும்புவில் போராட்டம் நடத்தினர். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது
காணாமல்போன தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு அரசை வலியுறுத்தி நடத்தப்பட்ட
போராட்டத்தில் அனைத்து மதங்களின் ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டனர். “தமிழ்
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்” என்று கோஷமிட்டபடி ஆயிரத்துக்கு அதிகமானோர் புகைப்படங்களையும்
அட்டைகளையும் ஏந்திக் கொண்டு சென்றதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது. அப்பாவி தமிழ்
மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் “கறுப்பு ஜூலை” தினத்தையொட்டி இப்போராட்டம்
நடத்தப்பட்டது. இலங்கையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிறையில்
இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.