2011-07-27 16:30:27

இரகசிய முகாம்களில் ஐந்தாயிரம் வரையில் தமிழ் இளையோர் தடுத்துவைப்பு


ஜூலை 27,2011. அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட இலங்கை தேசிய மூலச் சட்டத்திற்கு முரணான வகையில் இரகசியமான மர்ம முகாம்களில் ஐந்தாயிரம் வரையிலான தமிழ் இளைஞர், இளைஞிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று சோஷலிச இளைஞர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அரசியல் கைதிகள் மற்றும் மர்ம முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர்களின் விபரங்களை நாம் சிறப்பு நடவடிக்கைகள் வழியாக பாராளுமன்றில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
பத்தரல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் இச்செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்னாயக்க கூறுகையில், 1983 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களினால் தேசிய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி பிரிவினைவாதம், ஆயுதப் போராட்டம் என்று இனமுரண்பாடு தீவிரமடைந்தது என்று தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.