2011-07-23 16:02:29

அவிலாவில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் உலக மாநாடு


ஜூலை 23,2011. கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் உலகக் கருத்தரங்கு வருகிற ஆகஸ்ட் 12 முதல் 14 வரை இஸ்பெயினின் அவிலா நகரில் நடைபெறவுள்ளது.
இதில் 40 நாடுகளிலிருந்து 90 பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
உலகில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் பங்கு மற்றும் இன்றைய சமூதாயத்திற்கு அவை ஆற்றி வரும் சேவை குறித்துச் சிந்திப்பதற்கு இந்தக் கருத்தரங்கு உதவும் என்று இந்நிகழ்ச்சியின் இயக்குனர் அருட்பணி Rosario Saez Yuguero கூறினார்.
திருப்பீட கத்தோலிக்கக் கல்விப் பேராயத் தலைவர் கர்தினால் Zenon Grocholewski இக்கருத்தரங்கைத் தொடங்கி வைப்பார்.
உலக இளையோர் தினத்திற்காக ஆகஸ்ட் 18 முதல் 21 வரை இஸ்பெயினில் இருக்கும் திருத்தந்தையை, கத்தோலிக்கப் பல்கலைக்கழக அதிபர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு ஆகஸ்ட் 19ம் தேதி சந்திப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.