ஜூலை 22,2011. “திருச்சபையும் டிஜிட்டல் ஊடக உலகமும்” என்ற தலைப்பில் இலத்தீன் அமெரிக்காவின்
சிலே நாட்டில் வருகிற அக்டோபரில் மாநாடு ஒன்று நடைபெறவிருக்கின்றது. இலத்தீன் அமெரிக்கத்
திருச்சபையின் கணனி வலை அமைப்பும் இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையும் திருப்பீடச் சமூகத்
தொடர்பு அவையும் இணைந்து இம்மாநாட்டை நடத்தவுள்ளன. வருகிற அக்டோபர் 17 முதல் 19 வரை
சந்தியாகோவில் இம்மாநாடு நடைபெறும்