2011-07-22 16:03:16

இராமதான் போர் நிறுத்த பரிந்துரைக்கு நேட்டோ பாராமுகமாய் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது - டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி


ஜூலை 22,2011. இசுலாமியரின் இராமதான் மாதத்தையொட்டி பரிந்துரைக்கப்பட்ட போர் நிறுத்தத்தை நேட்டோ அமைப்பும் ஐரோப்பாவும் பாராமுகமாய் இருப்பது தனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பதாக லிபிய நாட்டு டிரிப்போலியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli கவலை தெரிவித்தார்.
தற்போது குண்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தாலும் அப்பாவி மக்கள் பலியாகுவதைத் தவிர்ப்பதற்காகப் புதிய மனிதாபிமான யுக்திகள் கடைபிடிக்கப்படுவதையும் ஆயர் Martinelli, ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
குண்டுகளை வீசுமுன் அவற்றைப் போடப்போகும் பகுதிகளில் எச்சரிக்கைத் துண்டுத் தாள்கள் வீசப்படுவதாயும் அதனால் மக்கள் அவ்விடங்களை விட்டு வெளியேறுவதாயும் அவர் கூறினார்.
ஆயினும் இந்தக் குண்டுவீச்சுக்கள் ஏன் என்ற கேள்வியையும் ஆயர் எழுப்பியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.