2011-07-20 16:13:33

ஜூலை 21, 2011. – வாழ்ந்தவர் வழியில்........,


கர்நாடக மாநிலத்தின் தர்வாத் நகரில் 1913ம் ஆண்டு மார்ச் 5ம் நாள் பிறந்தார் இந்துஸ்தானி இசைப்பாடகி கங்குபாய் ஹங்கல். தாயார் ஒரு சிறந்த கர்நாடக இசைப் பாடகி. 1928 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் ஹூப்ளி என்ற நகருக்கு இடம்பெயர்ந்தனர். கங்குபாய் தனது இந்துஸ்தானி இசையை சவாய் காந்தர்வா என்பவரிடம் முறையாகப் பயின்றார். தனது 16வது வயதில் குருராவ் என்பவரை மணந்த கங்குபாய்க்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், கிருஷ்ணா என்ற பெண்ணும் பிறந்தனர். 60 ஆண்டுகளாக இந்துஸ்தானி இசைத் துறையில் புகழ்பெற்று விளங்கிய பாடகி கங்குபாய் ஹங்கல், 1971-ம் ஆண்டில் பத்ம பூசன், 1973-ம் ஆண்டில் சங்கீத நாடக அக்கடெமி விருது, 2002-ம் ஆண்டில் பத்ம விபூசன் உட்பட தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மொத்தம் 48 விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தனது 96ம் வயதில் 2009ம் ஆண்டு ஜூலை 21ல் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.