2011-07-20 16:40:24

கிழக்கு ஆப்ரிக்காவில் நூறாயிரக்கணக்கான மக்கள் பசிச்சாவை எதிர்நோக்கும் ஆபத்து - கோர் ஊனும் அவை


ஜூலை20,2011. கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறைபடுவதால் அப்பகுதியில் நூறாயிரக்கணக்கான மக்கள் பசிச்சாவை எதிர்நோக்கும் ஆபத்தில் இருக்கின்றனர் என்று திருப்பீட “கோர் ஊனும்” பிறரன்பு அமைப்பு எச்சரித்தது.
திருச்சபையின் பிறரன்புப் பணிகளை மேற்பார்வையிடும் இந்தக் “கோர் ஊனும்” பிறரன்பு அமைப்பு, அப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் அவசரகால மனிதாபிமான உதவிகளுக்கு ஞாயிறன்று திருத்தந்தை விண்ணப்பித்ததையும் குறிப்பிட்டது.
மேலும், ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் திஜிபுத்தி, எத்தியோப்பியா, கென்யா, சொமாலியா ஆகிய இந்நாடுகளில் குறைந்தது ஐந்து இலட்சம் சிறார் புரதச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யூனிசெப் நிறுவனம் கூறியது.
இந்த அவசரகால நெருக்கடி அடுத்த ஆறு மாதங்களில் மேலும் மோசமடையக்கூடும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.