2011-07-20 16:49:29

இலங்கையில் போர் மீண்டும் தொடங்கக்கூடும் - ICG குழு எச்சரிக்கை


ஜூலை20,2011. இலங்கையில் தமிமீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஈராண்டுகள் ஆகியுள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட போர் உருவாகும் ஆபத்து தெரிவதாக ICG என்ற அனைத்துலக நெருக்கடிகால குழு எச்சரித்தது.
இச்சர்வதேச குழு இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கை ஒப்புரவுக்கு வெகு தூரத்தில் இருக்கின்றது என்றும் அதிகாரமும் செல்வமும் அரசுத்தலைவர் ராஜபக்ஷ குடும்பத்தில் குவிந்துள்ளன என்றும் இலங்கையில் போர் மீண்டும் தொடங்கக்கூடும் ஆபத்து இருக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 1,80,000 பேர் இன்னும் தற்காலிக முகாம்களில் இருப்பதையும், நாட்டின் வடக்கும் கிழக்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதையும் அக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.