2011-07-20 16:43:53

இந்தியாவின் இராணுவ உதவி மியான்மாரில் வன்முறை அதிகரிக்க உதவக்கூடும் – மனித உரிமை ஆர்வலர் குற்றச்சாட்டு


ஜூலை20,2011. மியான்மார் இராணுவ அரசுக்கு 52 இராணுவ வண்டிகளுக்கு வெடிமருந்துக் குண்டுகளும் ஆயுதங்களும் வழங்கியதன் மூலம் இந்திய அரசு தனது சனநாயகக் கொள்கைகள் அனைத்தையும் மீறியுள்ளது என்று இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவைத் (GCIC) தலைவர் Sajan K George குறை கூறினார்.
இந்தியாவின் இராணுவ வியாபாரம், மியான்மாரின் Kachin, Shan, Karen ஆகிய இனங்களின் மக்களுக்கு எதிரான வன்முறையை அதிகரிக்கின்றது என்றும் ஜார்ஜ் தெரிவித்தார்.
பல்வேறு மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், பாலின வன்புணர்ச்சிகள் போன்றவற்றிற்கு மியான்மார் இராணுவம் ஏற்கனவே குறைகூறப்பட்டுவரும்வேளை, இந்தியாவின் இராணுவ உதவி, இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கையில் கடும் விலைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறை கூறினார் ஜார்ஜ்.
கடந்த மார்ச் 30ம் தேதியிலிருந்து ஆட்சியிலிருக்கும் புதிய அரசின் அதிபர் Thien Sein, இராணுவத்தின் ஆதரவு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.