2011-07-18 17:09:50

திருத்தந்தையின் மூவேளை செப உரை


ஜூலை 18, 2011. தீமைகளுக்கு எதிரானப் போராட்டத்தில் பொறுமை காப்பதன் அவசியம் குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்தியம்பினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
நல்விதைகளும் களைகளும் பற்றிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தன் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கன்தோல்ஃபோவிலிருந்து உரை வழங்கிய திருத்தந்தை, நம்முள் விதைக்கப்பட்டுள்ள மிக இரகசியமான மற்றும் சிறிய விதை, அடக்கி வைக்க முடியாத உயிர் சக்தியைத் தன்னுள் கொண்டுள்ளது என்றார். இறைவனின் திட்டத்திற்கு ஏற்றபடி வாழ்வின் நிலத்தில் பயிர்செய்யப்படும் இவ்விதை அனைத்துத் தடைகளையும் தாண்டிப் பலன் தரும் என்றார். முதலில் களைகள் போல் தோன்றுபவை பின்னர் பலன் தரும் கோதுமைப் பயிர்களாக மாறும் என, புனித அகுஸ்தீனார் இந்த உவமை குறித்து எடுத்துரைத்துள்ளதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, தீமையின் விதைகள் நம்முள் முளைவிடாமல் இருக்க இறைவன் மீதான விசுவாசத்தை வளர்க்கவேண்டியதன் அவசியத்தையும் எடுத்தியம்பினார்.
நன்மை நிரம்பிய தந்தையின் பிள்ளைகளாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரைப் போல் செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.