2011-07-18 17:08:55

திருத்தந்தை, மலேசியப் பிரதமர் சந்திப்பு


ஜூலை 18, 2011. இத்திங்கள் காலை திருத்தந்தையை அவரின் காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் சந்தித்து உரையாடினார் மலேசிய பிரதமர் Najib Bin Abdul Razak.
திருத்தந்தையைத் தனியாகச் சந்தித்து உரையாடிய பின், திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடன் ஆன திருப்பீட உறவுகளுக்கான செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்து இன்றைய உலகச் சூழல்கள் குறித்து கலந்துரையாடினார் பிரதமர்.
திருப்பீடத்திற்கும் மலேசியாவிற்கும் இடையேயான உறவு முன்னேற்றங்கள், அரசியல் உறவை நிலைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இன்றைய உலகின் அரசியல் மற்றும் சமூகச்சூழல்கள், குறிப்பாக ஆசிய நிலைகள், அமைதியையும் நீதியையும் மேம்படுத்தும் நோக்கிலான கலாச்சாரங்களிடையேயான மற்றும் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளின் அவசியம் போன்றவை குறித்தும் இச்சந்திப்பின்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன







All the contents on this site are copyrighted ©.