2011-07-18 17:12:03

கத்தோலிக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தில் தலையிடுவதை மத்திய பிரதேச அரசு நிறுத்தவேண்டும் – போபால் பேராயர்


ஜூலை 18, 2011. மத்திய பிரதேச மாநில அரசு கத்தோலிக்கப் பள்ளிகளில் தலையிடுவதை நிறுத்தி, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ.
100க்கும் மேற்பட்ட கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளின் போபால் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர், கத்தோலிக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தில் மாநில அரசின் தலையீட்டு முயற்சிகள் குறித்து கவலையை வெளியிட்டார்.
கத்தோலிக்கப் பள்ளிகள் எவ்விதப் பாகுபாடுமின்றி அரசால் நடத்தப்பட்டு அதற்கேயுரிய மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் போபால் பேராயர் கொர்னேலியோ. மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் தலத்திருச்சபை ஒரு பங்குதாரராக நோக்கப்படவேண்டும் என்ற விண்ணப்ப்த்தையும் அரசுக்கு முன் வைத்தார் பேராயர்.








All the contents on this site are copyrighted ©.