2011-07-16 15:22:02

சட்டத்திற்குப் புறம்பான ஆயர் திருநிலைப்பாடுகள் உறவுகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றன – சீனப் பேராயர்


ஜூலை 16,2011. சீனாவில் நடத்தப்படும் இவ்வாயர் திருநிலைப்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயச் செயலர் பேராயர் Savio Hon Tai-Fai, சீனாவின் இந்நடவடிக்கை, சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவுகளைப் “பின்னுக்குத் தள்ளும் புதிய நடவடிக்கையாக” இருக்கின்றது என்றார்.
திருச்சபை அரசால் நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என்பதில் சீன அரசும் அரசியல்வாதிகளும் உறுதியாய் இருக்கின்றனர் என்று ஹாங்காக்கைச் சேர்ந்த பேராயர் Hon Tai-Fai, La Stampa என்ற இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
2010, நவம்பர் மற்றும் அண்மையில் நடந்துள்ள ஆயர் திருநிலைப்பாடுகள், 1950களில் இருந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றன என்றும் பேராயர் Hon Tai-Fai தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.