2011-07-12 16:27:29

கோவாவில் குழந்தைகள் மீதான பாலின வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை – கோவா பேராயர்


ஜூலை12,2011. குழந்தைகள் பாலின முறையில் சுரண்டப்படுவதை தடுக்கும் நோக்குடன் கோவா அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் கோவாப் பேராயர் பிலிப்பே நேரி ஃபெராவோ.
குழந்தைகளைப் பாலின முறையில் வியாபாரப் பொருளாக பயன்படுத்துவது குறித்து தாய்லாந்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், அதில் ஈடுபட்டுள்ளோர் ஆசியாவில் வேறு இடங்களைத் தேடி வருவதாக உரைத்த பேராயர், பாலின வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகம் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் 15 இலட்சம் சிறார்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்ற பேராயர் ஃபெராவோ, கோவாவில் குழந்தைகள் மீதான பாலின வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்தக் கவலையையும் வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.