2011-07-12 16:29:16

உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


ஜூலை12,2011. ஏழைகளுக்கு மானிய விலையில் உணவுத் தானியங்கள் கிடைக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் நாடு முழவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளியவர்கள் 75 சதவீதத்தினருக்கும், புறநகர்ப் பகுதியில் உள்ள ஏழைகளுக்கும் மானிய விலையில் உணவு தானியம் கிடைக்கும்.
வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ள இச்சட்டத்தின்படி, வறுமைக் கோட்டிற்குக்கீ்ழ் உள்ளவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு மூன்று ரூபாய்க்கு ஏழு கிலோ அரிசியும், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமையும் கிடைக்கும் என்றும், பொதுப் பிரிவினருக்கு மாதம் 3 அல்லது 4 கிலோ அரிசியும் கிடைக்கும் எனவும், விவசாயிகளின் உற்பத்தி நெல்லுக்கு குறைந்த ஆதரவு விலை கிடைக்க வகை செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன







All the contents on this site are copyrighted ©.