2011-07-07 15:15:56

ஜூலை 08 வாழ்ந்தவர் வழியில்.....


கிறிஸ்டியான் ஹகன்ஸ் (Christiaan Huygens) ஒரு டச்சு கணிதவியலாளர், வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். வரலாற்றாய்வாளர்கள் இவரைப் பொதுவாக அறிவியல் புரட்சியுடன் தொடர்புபடுத்துகின்றனர். இவர் நெதர்லாந்தில் டென்ஹாக் நகரில் 1629ம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாள் பிறந்தார். லைடன் பல்கலைக்கழகத்தில் சட்டம், மற்றும் கணிதம் படித்தார். அதன் பின்னரே அறிவியல் படிக்க ஆரம்பித்தார். ஒளி அலைகளைக் கொண்டிருப்பதாக ஹகன்ஸ் கூறிய கருத்து அலை-துகள் இரட்டைத்தன்மையைப் பின்னர் விளக்க உதவியது. தற்கால நுண்கணித வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 1655ஆம் ஆண்டில் சனிக்கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார். அத்துடன் சனிக் கோளின் வளையங்களை ஆராய்ந்து அவை பாறைகளினால் ஆனவை என்பதை 1656 இல் கண்டறிந்தார். அதே ஆண்டில் ஓரியோன் என்ற தொலை விண்மீன் தொகுதி பற்றி ஆராய்ந்து அதன் மாதிரிப் படத்தையும் வரைந்தார். அவரது தொலைக்காட்டி மூலம் இவ்விண்மீன் தொகுதியைக் கண்டுபிடித்து அவற்றைத் தனித்தனி விண்மீன்களாகப் பிரிப்பதில் வெற்றி கண்டார். (ஓரியோனின் நடுப்பகுதிக்கு இவரது நினைவாக " ஹகன்ஸ் பகுதி" எனப் பெயரிடப்பட்டது). ஐசக் நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியை இருபடிச் சமன்பாடாக மாற்றி எழுதியவரும் இவரே. இலாய்சி பாஸ்கலின் வேண்டுகோளுக்கிணங்க நிகழ்தகவுத் தத்துவம் குறித்த ஒரு நூலை எழுதி 1657 ஆம் ஆண்டில் வெளியிட்டார். கிறிஸ்டியான் ஹகன்ஸ் 1695 ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.