கொரியத் தீபகற்பத்திற்கு உணவுப் பாதுகாப்பு ஒரு சவாலாக இருக்கின்றது – ஆயர் மத்தியாஸ்
ஜூலை06,2011. “தாராளமயமாக்கப்பட்ட உலகப் பொருளாதாரம்”, உலகளாவிய வெப்பநிலை மாற்றம், பிரச்சனைக்குரிய
நான்கு நதிகள் திட்டம் ஆகியவற்றால் உணவுப் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது என்று தென்
கொரிய ஆயர் ஒருவர் தனது அண்மை அறிக்கையில் குறை கூறியுள்ளார். உலகில் ஏறக்குறைய நூறு
கோடிப்பேர் பசியால் வாடுகின்றனர் என்றுரைத்த ஆயர் Matthias Ri Ioung-hoon, வட கொரியாவுடன்
தொடர்ந்து இடம் பெற்று வரும் பதட்டநிலைகளால் தென் கொரியா உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறது
என்றார். தென் கொரியாவில் இம்மாதம் 17ம் தேதி விவிசாயிகள் ஞாயிறு கடைபிடிக்கப்படுவதையொட்டி
அறிக்கை வெளியிட்ட ஆயர் மத்தியாஸ், உணவு இறக்குமதிகளைப் போர் தடை செய்தால் நான்கில் மூன்று
பகுதி தென் கொரியர்கள், தங்கள் வாழ்க்கைக்காக உணவைச் சேமித்து வைக்க முடியாது என்று கூறினார்.
தென் கொரியாவில் கடந்த ஆண்டில் 26.7 விழுக்காட்டு விவசாயிகள் மட்டுமே தன்னிறைவோடு
வாழ்ந்தனர் என்றும் ஆயர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.