ஆப்ரிக்க மக்கள் தங்களது இன்ப துன்ப நேரங்களில் இறைவார்த்தையில் சக்தியைப் பெற திருத்தந்தை
அழைப்பு
ஜூலை05,2011. ஆப்ரிக்க மக்கள் தங்களது இன்ப துன்ப நேரங்களில் இறைவார்த்தையைப் பின்பற்றுவதன்மூலம்
அவர்கள் உயிர்த்த கிறிஸ்துவோடு என்றும் இருந்து அவரில் வாழ முடியும் என்று திருத்தந்தை
கூறினார். ஆப்ரிக்க மக்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கும் சவால்களைச் சந்திப்பதற்கு
விடுதலையளிக்கும் நற்செய்தி வார்த்தைகளை எடுத்துரைத்து வரும் ஆயர்களின் பணிகளையும் பாராட்டினார்
திருத்தந்தை. AMECEA என்ற கிழக்கு ஆப்ரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன்
பொன்விழாவை நைரோபியில் சிறப்பித்த ஆயர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருத்தந்தை
இவ்வாறு கூறியுள்ளார். இச்செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே,
திருத்தந்தையின் பெயரில் அக்கூட்டமைப்பின் தலைவர் மலாவி பேராயர் Tarcisio Ziyaye க்கு
அனுப்பியுள்ளார். மேலும், கிழக்கு ஆப்ரிக்க ஆயர்களும் தங்களது நன்றியைத் தெரிவித்து
திருத்தந்தைக்குச் செய்தி அனுப்பியுள்ளனர்