2011-07-01 15:41:42

ஆயுத மோதல்களின் போது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவது குறித்து ஐ.நா.பொதுச்செயலர் கவலை


ஜூலை01, 2011. அண்மைக் காலங்களில் ஆயுத மோதல்களின் போது பள்ளிகளும் மருத்துவமனைகளும் தாக்கப்படுவதும், குழந்தைகள் அச்சுறுத்தப்படுவதும் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு அவைகள் நிறுத்தப்படுவதற்கான அழைப்பை முன்வைத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
குழந்தைகளுக்கான கல்வியையும் நல பராமரிப்பு நடவடிக்கைகளையும் தடைச் செய்யும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஐ.நா. நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார் அவர்.
சிறார்களைப் படைவீரர்களாகத் தேர்வுச் செய்வது தடைச் செய்யப்படவேண்டும் என்பதில் அரசுகள், அரசு சாரா அமைப்புகள், பொது மக்கள் குழுக்கள் ஆகியவை ஆற்றி வரும் பணிகள் பற்றியும் குறிப்பிட்ட பொதுச்செயலர் பான் கி மூன், இது குறித்தக் காலவரையறையுடன் கூடிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டிய அவசரத் தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டார்







All the contents on this site are copyrighted ©.