2011-06-30 15:39:11

ஜூலை 01 வாழ்ந்தவர் வழியில்.....


விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா(Kalpana Chawla), 1961ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தார். கல்பனா என்றால் சமஸ்கிருதத்தில் கற்பனை என்று பொருள். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த கல்பனா சாவ்லா, 1982 ஆம் ஆண்டு, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியலில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அமெரிக்கா சென்று விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டம் பெற்று 1988 ஆம் ஆண்டு நாசா அமெஸ் ஆராய்ச்சிக் கூடத்தில் ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார். 1995 ஆம் ஆண்டில், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் தன்னைத் தயார்படுத்தினார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். கல்பனா தனது முதல் பயணத்திலேயே 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மையில்கள் கடந்து பூமியைச் சுற்றி சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்துள்ளார். கொலம்பியா என்னும் விண்வெளி கலத்தில் 5 விண்வெளி வீரர்களுடன் பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். கொலம்பியா விண்ணோடத்தில் பறந்து பூமிக்குத் திரும்பும் பொழுது, விண்கலம் வெடித்துச் சிதறியதில் 2003ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி உயிரிழந்தார் கல்பனா சாவ்லா. இவரைக் கௌரவிக்கும் விதமாக நியூயார்க் நகரிலுள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கல்பனா சாவ்லாவின் மறைவுக்கு பின்னர் பல விருதுகள் அவருக்குக் குவிந்தன.
விண்வெளிக்கு செலுத்தி எரிமீங்களை ஆராயும் மெட்சாட் எனும் செயற்கைக் கோள் வரிசைக்கு இந்திய பிரதமர் பிப்ரவரி 5, 2003 அன்று கல்பனா வரிசை என்று பெயர் மாற்றுவதாக அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.