2011-06-29 15:34:17

மத்திய பிரதேசத்தில் அமைதியை ஊக்குவிப்பதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் எல்லா மதங்கள் பற்றியும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் : அருட்பணி முட்டுங்கல்


ஜூன்29,2011. சமூகத்தில் “நல்லிணக்கத்தையும் அமைதியையும்” வளர்ப்பதற்கு மத்திய பிரதேச மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இந்துமதம் பற்றி மட்டுமல்லாமல் எல்லா மதங்கள் பற்றியும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய பிரதேச மாநில ஆயர் பேரவையின் பொது உறவுகளுக்கானத் தலைவர் அருட்பணி ஆனந்த் முட்டுங்கல் கூறினார்.
மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் Shivraj Singh Chauhan க்கு முன்வைத்த அழைப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அருட்பணி முட்டுங்கல், அம்மாநிலத்தில் அரசும் மதமும் தனித்தனியாக இயங்க வேண்டுமென்ற தனது அழைப்பு கேட்கப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தை வளமையான மாநிலமாக உருவாக்குவதற்கு அம்மாநிலத்தின் அரசியலமைப்பில் அரசும் மதமும் பிரிக்கப்படுவதற்கு முதலமைச்சர் போதுமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உறுதி வழங்குமாறும் அருட்பணி முட்டுங்கல் கேட்டுக் கொண்டார்.
பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் Shivraj Singh Chauhan, சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை வெறுப்பூட்டும் பல சட்டங்களையும் விதிமுறைகளையும் அங்கீகரித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.