2011-06-29 16:18:19

ஜூன் 30, 2011. – வாழ்ந்தவர் வழியில்........,


தாதாபாய் நௌரோஜி, இந்தியாவின் அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இவர் 1825ம் ஆண்டு செப்டம்பர் 6ம் நாள் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் செயல்பட்டார். இவரது ‘பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்’ (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரித்தானிய அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.
தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துக்கள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துக்களாகும்.
இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும், வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார் தாதாபாய். 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20தான் என்று சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார்.
காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருந்தலைவர் மகாத்மா காந்தி, தாதாபாய்தான் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார்.
1917ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலமானார் தாதாபாய் நௌரோஜி.








All the contents on this site are copyrighted ©.