2011-06-29 15:39:47

ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றன, ஐ.நா.


ஜூன்29,2011. ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் திஜிபுத்தி, எத்தியோப்பியா, கென்யா, சொமாலியா, உகாண்டா போன்ற நாடுகளில் சுமார் ஒரு கோடிப் பேர் கடும் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர் என்று ஐ.நா. அறிவித்தது.
இந்நாடுகள் கடந்த அறுபது ஆண்டுகளில் தற்சமயம் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன என்று ஐ.நா.மனிதாபிமான அலுவலகம் அறிவித்தது.
தென் சொமாலியாவிலிருந்து எத்தியோப்பிய முகாம்களுக்கு வரும் சிறாரில் ஏறக்குறைய பாதிப்பேர் ஊட்டச்சத்துக்குறையுடன் உள்ளனர் என்றும் ஐ.நா.கூறியது







All the contents on this site are copyrighted ©.