2011-06-27 16:29:41

உலகம் முழுமைக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை திருநற்கருணை என்கிறார் திருப்பீடப் பேச்சாளர்


ஜூன் 27, 2011. திருநற்கருணையால் பலன்பெறுபவர்கள் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, ஏனெனில் அது உலகம் முழுமைக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்றார் திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
திருநற்கருணையின் வல்லமை குறித்து 'ஒக்தாவோ தியேஸ்' என்ற தன் வாராந்திர தொலைக்காட்சித்தொடரில் உரை வழங்கிய குரு லொம்பார்தி, பிரிவினைகளை மேற்கொள்ளவும், இறைவனின் வாழ்வுடனான ஒன்றிப்பை நோக்கி நம்மை அழைத்து வரவும், சுயநலப்போக்குகளில் இருந்து நம் தனிப் பண்புகளுக்கு விடுதலை அளிக்கவும் திருநற்கருணையின் சக்தி உதவுகிறது என்றார்.
உலகமயமாக்கல் கோட்பாடு பரவி வரும் இன்றையக் காலக்கட்டத்தில் சகோதரத்துவமும் நீதியும் ஒருமைப்பாடும் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கானக் கிறிஸ்தவர்களின் முயற்சியில், திருநற்கருணை எனும் அன்பு திருச்சபையிலும் உலகிலும் பரவி உதவுகிறது என்றார் திருப்பீடப் பேச்சாளர்.
வளர்ந்து வரும் இன்றையக் காலக்கட்டத்தில் உண்மையான அன்பின் இருப்பிற்கு அழைப்பு விடுத்தார் குரு லொம்பார்தி







All the contents on this site are copyrighted ©.