2011-06-24 15:31:20

இரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் 93 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக திருநற்கருணை பவனி நடைபெறவுள்ளது


ஜூன்24,2011. இரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் 1918ம் ஆண்டுக்குப் பின்னர் அதாவது 93 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக திருநற்கருணை பவனி நடைபெறுவதற்கு அந்நகர மேயர் அனுமதியளித்துள்ளார்.
இத்தகவலை வெளியிட்ட மாஸ்கோ இறையன்னை உயர் மறைமாவட்டம், இந்தப் பவனியானது ஜூன்26, இஞ்ஞாயிறன்று அந்நகரின் முக்கிய சாலையான Prospettiva Nevsky Avenue வழியாக நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், லூத்தரன், அர்மேனியன் ஆகிய கிறிஸ்தவ சபைகளின் ஆலயங்கள் இந்தச் சாலையில் இருப்பதால் இச்சாலையானது “கிறிஸ்தவ சபைகளின் சகிப்புத்தன்மை பாதை” எனப் பாரம்பரியமாக அழைக்கப்படுகிறது.
மாஸ்கோ பேராயர் Paolo Pezzi இப்பவனியை முன்னின்று நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.