2011-06-23 14:16:42

கொலம்பியாவில் போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்து வரும் 5000 பேர் சரண் அடைவதற்கு தலத்திருச்சபையின் உதவி


ஜூன் 23,2011. கொலம்பியா நாட்டில் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை ஆகியவை உட்பட பல்வேறு குற்றங்களைப் புரிந்து வரும் 5000 பேர் காவல்துறையிடம் சரண் அடைவதற்கு தலத்திருச்சபையின் உதவியை நாடியுள்ளனர்.
மீண்டும் சமுதாயத்தில் இயல்பான வாழ்வை வாழ விரும்பும் இக்குற்றவாளிகளுக்கு எவ்வகையில் உதவ முடியும் என்பதைத் தலத்திருச்சபை ஆய்ந்து வருவதாக Monteria மறைமாவட்ட ஆயர் Julio Cesar Vidal கூறினார்.
நிபந்தனைகள் ஏதுமின்றி இக்குற்றவாளிகள் காவல்துறையிடம் சரண் அடைவதால், அவர்கள் தகுந்த முறையில் நடத்தப்பட்டு, உரிய தண்டனைகள் பெற்றபின் மீண்டும் அவர்கள் புது வாழ்வை மேற்கொள்ளும் வழிகளை கண்டுகொள்ள தலத்திருச்சபை உதவிகள் செய்யும் என்று ஆயர் Vidal மேலும் கூறினார்.
இக்குற்றவாளிகள் சரண் அடைவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்றும், இந்த முயற்சி சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டால் உலகமே இந்தச் செயலால் வியக்கும் என்றும், ஆயர் Vidal கூறினார்.








All the contents on this site are copyrighted ©.