2011-06-23 14:17:57

இமயமலை அடிவாரத்தில் மானஸ் வனவிலங்கு சரணாலயத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளன - UNESCO


ஜூன் 23,2011. இந்தியாவின் இமயமலை அடிவாரத்தில் உள்ள மானஸ் வனவிலங்கு சரணாலயத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளன என்று ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது.
இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான UNESCO அமைப்பு, 1992ம் ஆண்டு இப்பகுதியை உலகப் பாரம்பரியத்திற்கு ஆபத்துள்ள பகுதி என்று அறிவித்தது.
கடந்த ஆண்டுகளில் இப்பகுதியின் பாதுகாப்பிற்காகத் தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்தக் காட்டுப் பகுதியை, ஆபத்துள்ள பகுதி என்ற பட்டியலில் இருந்து எடுத்துவிடுவதாக UNESCO நிறுவனம் இச்செவ்வாயன்று அறிவித்தது.
இயற்கை வளங்களும், கண்கவரும் இயற்கைக் காட்சிகளும் நிறைந்த மானஸ் வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள், யானைகள், காண்டாமிருகம் ஆகியவை வேட்டையாடப்பட்டு வந்தன என்றும், தற்போது இந்த மிருகங்களுக்கும், அப்பகுதியின் நிலப்பரப்பிற்கும் தேவையான அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறதென்றும் UNESCOவின் அறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.