2011-06-21 15:52:50

உலகப் பொருளாதார அமைப்பு முறைகள் குறித்து மறுபரிசீலனைச் செய்ய அழைப்பு விடுக்கிறார் கர்தினால் Scola.


ஜூன் 21, 2011. ஏழ்மைக்கு எதிராகவும், மனித மாண்பு மதிக்கப்பட வேண்டியும் மத்தியக்கிழக்கு நாடுகளில் எழுந்துள்ள போராட்டங்களைப் புரிந்து கொண்டு அப்பிரச்னைகளுக்குத் தீர்வுகாண உதவும் நோக்கில் உலகப் பொருளாதார அமைப்பு முறைகள் குறித்து மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் Angelo Scola.
மத்தியக்கிழக்கு நாடுகளின் புதிய பாதை மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளின் எதிர்பாராத திருப்பம் ஆகியவை குறித்து இத்தாலியின் வெனிஸ் நகரில் கூடி விவாதித்து வரும் கத்தோலிக்கத் தலைவர்களின் கூட்டத்தில் எகிப்து, துனிசியா, சிரியா, குவைத் மற்றும் அபுதாபியின் தலத்திருச்சபைத் தலைவர்களும், உலகின் பல்வேறுப் பகுதிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஏழ்மையாலும், உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையாலும் பாதிக்கப்பட்ட மத்தியக் கிழக்கு நாடுகளின் மக்களால் கொணரப்பட உள்ள மாற்றங்களுக்கான ஆதரவு, கிறிஸ்தவ மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் இருக்க வேண்டும் என்றார் கர்தினால் Scola.
ஆப்ரிக்காவின் வளர்ச்சியை மனதிற்கொண்டதாய், மக்களையும், பொருட்களையும் உலகமயமாக்கலைத் தாண்டி, மதிப்பீடுகளையும் வளங்களையும் உலகமயமாக்கும் நிலை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்றார் கர்தினால் Scola.








All the contents on this site are copyrighted ©.