2011-06-18 17:21:54

தென் சூடானில் இனப்படுகொலைகள் மீண்டும் இடம்பெறும் அபாயம்


ஜூன் 18,2011. தென் சூடானில் இனப்படுகொலைகள் மீண்டும் இடம்பெறும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
சூடானின் தென்பகுதி தனிநாடாகப் பிரிந்துச் செல்ல இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தென் எல்லைப்பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தால் வெளியேறி வருவதாகக் குறிப்பிட்ட எல் ஒபெய்த் மறைமாவட்ட ஆயர் Macram Max Gassis, தென்பகுதி Kordofan மாநிலத்தின் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பதட்டநிலைகளால் வெகு அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தென் சூடான் தனி நாடாகப் பிரிந்துச் செல்வதற்கு இந்த ஜனவரி மாதத்தின் கருத்து வாக்கெடுப்பில் மக்கள் பெருமளவில் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, வரும் ஜூலை மாதம் 9ந்தேதி அது தனி நாடாக உருவாக உள்ளது.








All the contents on this site are copyrighted ©.