2011-06-18 17:23:11

சமூகப் பிரச்னைகளில் இளையத் தலைமுறையின் பங்கு குறித்து ஆய்வு


ஜூன் 18,2011. சுற்றுச்சூழல் பாதிப்பு, வன்முறை மற்றும் மனித வியாபாரம் போன்ற சமூகப் பிரச்னைகளில் இளைய தலைமுறையின் பங்கு குறித்து ஆராயும் நோக்கில் 60 நாடுகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டப் பிரதிநிதிகள் புது டெல்லியில் கூடி விவாதித்து வருகின்றனர்.
IYCS எனப்படும் அனைத்துலக இளைய கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் 14வது உலக அவைக்கூட்டத்தில் பங்குபெறும் இப்பிரதிநிதிகள், 'பதட்ட நிலைகளும் மோதல்களும் கொண்ட உலகில் மணவர்கள் வழங்கும் நம்பிக்கை' என்ற தலைப்பில் இம்மாதம் 27ந்தேதி வரை கருத்தரங்கினை நடத்துவர்.
புதியதோர் உலகைக் கட்டியெழுப்புவதில், நம்பிக்கைகளையும் கண்ணோட்டத்தையும் வழங்க வேண்டிய இளையோரின் கடமையும் இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
மாணவப் பயிற்சியாளர்களுக்கான ஒரு பயிற்சிக்கூடமாக இருக்கும் இந்த 12 நாள் கருத்தங்கில் வன்முறை, சுற்றுச்சூழல், போதைப்பொருள் ஆகியவை குறித்த கருத்துப் பரிமாற்றங்களும், ஒவ்வொரு நாட்டு அனுபவப் பரிமாற்றங்களும் இடம்பெறுவதுடன், இளையோரிடையே விழிப்புணர்வையூட்டும் நிகழ்ச்சிகளும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.