2011-06-17 15:23:04

ஜூன் 18. வாழ்ந்தவர் வழியில் ....


அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞரும் ‘சரோத்’ என்ற இசைக் கருவியில் தேர்ந்த கலைஞரும் ஆவார். மேற்கத்திய நாடுகளில் சித்தார் மேதை ரவி சங்கருடன் இணைந்து இந்திய இசையை பன்முகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. 1956ம் ஆண்டில் இவர் கொல்கத்தாவில் ஓர் இசைக் கல்லூரியையும், 1967ல் அலி அக்பர் இசைக்கல்லூரி என்ற பெயரில் ஓர் இசைக்கல்லூரியையும் ஆரம்பித்தார். இக்கல்லூரி தற்போது கலிபோர்னியாவில் சான் ரபாயெல் என்ற இடத்தில் இயங்குகிறது. இதன் கிளை நிறுவனம் சுவிட்சர்லாந்தில் இயங்குகிறது. கான் பல இந்துஸ்தானி பாடல்களை அமைத்துள்ளார். பல இராகங்களை உருவாக்கியுள்ளார்.
கான் இந்தியாவின் பத்ம விபூசன் விருதை 1989ம் ஆண்டில் பெற்றார். இசை உலகில் புகழ்பெற்ற கிராமி விருதுகளுக்காக ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டவர்.
1922ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்த அலி அக்பர் கான், 2009ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி தன் 87ம் வயதில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.