2011-06-15 16:14:49

ஜூன் 16, 2011. – வாழ்ந்தவர் வழியில்........,


இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர் சித்தரஞ்சன் தாஸ்.
இவர் 1870ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி மேற்கு வங்கத்தில் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக்கல்வி கற்றவர். 1909ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில், அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.
மேற்கு வங்கத்தில் முக்கியப் புள்ளியாக இருந்த இவர், 1919-1922 ஆகிய ஆண்டுகளில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரித்தானிய ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார். மோதிலால் நேருவுடன் இணைந்து சுயாட்சிக் கட்சியை ஆரம்பித்தார்.
ஃபார்வர்ட் (Forward) என்ற செய்தித் தாளை பிரித்தானிய ஆட்சியாளருக்கு எதிராக ஆரம்பித்து நடத்தினார். இப்பத்திரிகை பின்னர் விடுதலை (liberty) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவர் பல கவிதைகளையும் இயற்றியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்பு சாகர் சங்கீத் என்ற பெயரில் புகழ் பெற்றவை.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சித்தரஞ்சன் தாஸ் 1925ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.