2011-06-14 15:39:58

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள 'Ratzinger விருதை' முதன் முறையாகப் பெறுவோரின் விவரங்கள்


ஜூன் 14,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள 'Ratzinger விருது' முதன் முறையாக இம்மாதம் 30ம் தேதி இறையியல் கல்வி வல்லுனர்கள் மூவருக்குத் திருத்தந்தையால் வழங்கப்பட உள்ளது.
திருத்தந்தையின் பெயரிலான இந்த வத்திக்கான் அமைப்பின் அறிவியல் கழகத்தின் தலைவர் கர்தினால் Camillo Ruini இந்த விருதைப் பெறவிருப்பவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்.
கிறிஸ்தவ வரலாற்றுப் பேராசிரியரான உரோமை நகரைச் சார்ந்த 85 வயது நிரம்பிய Manilo Simonetti, பல இறையியல் நூல்களை எழுதியுள்ள இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 76 வயது குரு Olegario Gonzalez de Cardedal, Cistersian துறவு இல்ல அதிபரும், இறையியலாலருமான 50 வயது நிரம்பிய ஜெர்மானிய குரு Maximilian Heim ஆகியோர் திருத்தந்தைப் பெயரிலான இறையியல் விருதைப் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.