2011-06-11 16:53:14

லாவோஸ் நாட்டின் வட பகுதியில் கிறிஸ்தவர்கள் மீதான கட்டுப்பாடுக்ள் அதிகரித்துள்ளன


ஜூன் 11,2011. வியட்நாமில் உரிமைகள் கேட்டு கடந்த மாதம் கிறிஸ்தவர்களின் போராட்டங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, லாவோஸ் நாட்டின் வியாட்நாம் எல்லைப்பகுதியில் கிறிஸ்தவர்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தலத்திருச்சபை அதிகாரி ஒருவர் கவலையை வெளியிட்டுள்ளார்.
லாவோஸ் நாட்டின் லுவான் பிரபாங் நகரில் கிறிஸ்தவ மத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கத்தோலிக்கர்கள் முழு கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், தேவ அழைத்தல்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார் குரு ரஃபேல் ட்ரான்சுவான் நான்.
1975ம் ஆண்டு லாவோஸ் நாடு கம்யூனிச கட்டுப்பாட்டின் கீழ் வந்ததிலிருந்து லுவான் பிரபாங் பகுதியிலிருந்து ஒருவரே குருவாகியுள்ளதாகவும், ஒரு பெண் துறவி கூட உருவாகவில்லை எனவும் கூறினார் அவர்.
லுவான் பிரபாங் கத்தோலிக்கர்கள் பிற இடங்களுக்குப் பயணம் செய்வதற்கு அங்குள்ள மாநில அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டிய நிலையையும் சுட்டிக்காட்டினார் குரு ட்ரான்சுவான் நான்.








All the contents on this site are copyrighted ©.