2011-06-09 15:43:11

நைஜீரியாவின் புனித பேட்ரிக் பேராலயத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரின் தாக்குதல்


ஜூன் 09,2011. நைஜீரியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதக் குழுவினரால் Maiduguri என்ற நகரில் உள்ள புனித பேட்ரிக் பேராலயம் இச்செவ்வாயன்று தாக்கப்பட்டதில் 16 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
பேராயலத்தில் வெடித்த ஒரு சக்திவாய்ந்த வெடி குண்டால் பேராலயத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டது என்றும், உயிர்ச் சேதம் உட்பட ஆலயம் பல அழிவுகளுக்கு உள்ளானது என்றும் Maiduguri ஆயர் Oliver Dashe Doeme கூறினார்.
‘மேற்கத்திய கல்வி ஒரு பாவம்’ என்று பொருள்படும் Boko Haram என்றப் பெயரைத் தாங்கிய இந்த அடிப்படைவாதக் குழுவினர் அண்மைக் காலங்களில் Maiduguriயில் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆப்ரிக்காவில் மிக அதிகமாய் மக்கள் தொகையைக் கொண்ட நைஜீரியாவில் இஸ்லாமியச் சட்டங்களே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கும் இக்குழுவினரின் வன்முறைகள் ஏப்ரல் மாதம் முதல் அதிகரித்துள்ளன என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
Maiduguri யில் பதட்ட நிலை உருவாகியுள்ளதென்று FIDES செய்தி நிறுவனத்திடம் கூறிய ஆயர் Doeme, இந்தப் பதட்ட நிலையில் கிறிஸ்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், கடந்த வாரம் இதே குழுவினரால் மற்றொரு கத்தோலிக்கக் கோவிலும் ஒரு பள்ளியும் தாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.









All the contents on this site are copyrighted ©.