2011-06-06 15:48:30

இயற்கையை நண்பனாக்கி நலமுடன் வாழ்வோம் (World Environment Day June 5)


ஜூன்06,2011. அன்பர்களே, எக்கலாத்தையும் இக்காலத்தில் சுற்றுச்சூழல் குறித்த செய்திகள் எல்லா மொழித் தினத்தாள்களிலும் அடிக்கடி தடித்த எழுத்துக்களில் வெளியாகி வருகின்றன. அண்மையில் மத்தியதரைக்கடலில் சேர்ந்துள்ள குப்பைகள் பற்றி ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதாவது மத்தியதரைக்கடலில் 25 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் துண்டுக் குப்பைகள் மலிந்து கிடக்கின்றன. இவை சுமார் 500 டன்கள் அளவுக்குச் சமம். இவை அக்கடலின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகளில் குவிகின்றன. இதனால் பல மத்திய கிழக்கு நாடுகளின் வாழ்வாதாரங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பசிபிக் பெருங்கடல்தான் குப்பைகள் குவிந்துள்ள பகுதி என்று இருக்கும் நிலையை இது மாற்றி இருக்கின்றது என்று அச்செய்தியில் வாசித்தோம். சுற்றுச்சூழலுக்கு கேடு வருவிக்கும் இந்த பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் தார்சாலை அமைத்து வருகிறார் பேராசிரியர் வாசுதேவன். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியரான இவர் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி, அரசு கெஜட்டிலும் வெளியிட்டுள்ளது. மறுபயன்பாட்டிற்கு வாரத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், டீ கப், தெர்மோகோல் ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்தவும், இவற்றை எரிப்பதால் பூமி வெப்பமடைவதை தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், பேராசிரியர் வாசுதேவன், 2001ல் ஆய்வு மேற்கொண்டார். அதன் பயனே இந்த பிளாஸ்டிக் தார்சாலை. இந்தத் தனது கண்டுபிடிப்பு குறித்து நமக்குத் தொலைபேசி வழியாகப் பேசினார்.
RealAudioMP3
நன்றி பேராசிரியர் வாசுதேவன். அன்பர்களே, ஜூன் 5 இஞ்ஞாயிறு உலக சுற்றுச்சூழல் தினம். இந்த உலக தினம் 1973ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு தலைப்பில் ஒவ்வொரு முக்கிய நகரத்தில் இந்நாளை ஐக்கிய நாடுகள் நிறுவனம் சிறப்பிக்கின்றது. இந்த ஆண்டு Pittsburgh நகரில் “காடுகள் : இயற்கை உங்களது சேவையில்” என்ற தலைப்பில் கடைபிடிக்கப்பட்டது. இயற்கையை அன்பு செய்து இன்று வாழும் நாம் மட்டுமல்லாமல், வருங்காலத் தலைமுறையும் நலமுடன் வாழ வழி செய்வோம்.







All the contents on this site are copyrighted ©.