2011-06-06 15:35:25

மருத்துவர்கள் உதவியுடன் நடத்தப்படும் தற்கொலைகள் குறித்து விவாதிக்க உள்ளனர் அமெரிக்க ஆயர்கள்


ஜூன் 06,2011. இம்மாதம் 15 முதல் 17 வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் சியாட்டில் நகரில் அந்நாட்டு ஆயர்கள் கலந்து கொள்ளும் பொது அவைக்கூட்டத்தில், மருத்துவர்கள் உதவியுடன் நடத்தப்படும் தற்கொலைகள் குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயர்கள் ஏற்கனவே தயாரித்துள்ள 'ஒவ்வொரு நாளும் மாண்புடன் வாழ்தல்' என்ற ஏடு குறித்த விவாதம் இடம்பெற உள்ளது என்பதை எடுத்தியம்பிய அமெரிக்க ஆயர்களின் வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கான அவையின் தலைவர் கர்தினால் டேனியல் தி நார்தோ, மருத்துவர்களின் உதவியுடன் நடத்தப்படும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த கவலையையும் வெளியிட்டார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல மாநிலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றாக மாறிவரும் இந்தத் தற்கொலைக்கு உதவும் சவாலை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டியது திருச்சபையின் கடமையாகிறது என மேலும் கூறினார் கர்தினால் தி நார்தோ.
வேதனைகளை அல்ல, மாறாக வேதனையை அனுபவிக்கும் நோயாளியையே ஒழிக்கும்
' மருத்துவர் உதவியுடனான தற்கொலை' என்பது கருணையுடன் கூடியச் செயல் அல்ல என தெரிவித்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.








All the contents on this site are copyrighted ©.