2011-06-06 15:46:59

ஜூன் 07 வாழ்ந்தவர் வழியில்...


அக்காலத்தில் முஸ்லீம்களின் ஆக்ரமிப்பிலிருந்த புனித பூமியை, அதாவது இயேசு கிறிஸ்து பிறந்து வளர்ந்து வாழ்ந்து மரித்த உயிர்த்த புனித பூமியை மீண்டும் பெறும் நோக்கத்தில் மேற்கத்திய கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட இராணுவத் தாக்குதலே சிலுவைப் போராகும். மேற்கத்திய கிறிஸ்தவர்கள் ஒன்பது சிலுவைப்போர்களை நடத்தியுள்ளார்கள். இதில் முதல் சிலுவைப்போர் 1096 முதல் 1099 வரை நடைபெற்றது. இப்போர் பைசாண்டைன் பேரரசர் Alexios I Komnenos ன் வேண்டுகோளுக்கு இணங்கி திருத்தந்தை இரண்டாம் உர்பான் என்பவரால் தொடங்கப்பட்டது. சுமார் 461 ஆண்டுகளாக எருசலேம் புனித நகரம் கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தின்கீழ் இல்லாமல் இருந்தது. எனவே இந்த முதல் சிலுவைப் போரின் முக்கிய நோக்கமே எருசலேமைக் கைப்பற்றுவதாகத்தான் இருந்தது. அம்முயற்சியும் வெற்றி அடைந்தது. எருசலேம் புனித நகரத்தையும் புனித பூமியையும் மேற்கத்தியக் கிறிஸ்தவர்கள் மீண்டும் கைப்பற்றினர். கிழக்கில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும் இசுலாமிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தனர். 1099ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி சிலுவைப் போர் வீரர்களின் பகுதிகள் உருவாக்கப்பட்டன. எனினும் இந்தப் போர்களில் மேற்கத்திய கிறிஸ்தவம் அடைந்த பலன்கள் 200 ஆண்டுகளுக்குக் குறைவாகவே நீடித்தன. ஆயினும் மேற்கில் அனைத்துலக வணிகம் தொடங்கப்படுவதற்கு இந்தச் சிலுவைப்போர்கள் முக்கிய காரணிகளாக அமைந்திருந்தன என்று வரலாறு சொல்கிறது.
“உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்” என்றார் மான்ஸ்பீல்டு








All the contents on this site are copyrighted ©.